D
பாலஸ்தீன எல்லையில் அமைந்துள்ள ஈலாட் துறைமுகத்தின் மீது ஈராக் இஸ்லாமிய போராளிகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடலில் இஸ்ரேலுக்கு சொந்தமான ஒரே துறைமுகமான ஈலாட் துறைமுகத்தின் மீதான இந்த தாக்குதல் காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிக்காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாலஸ்தீன மக்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவை தெரிவிப்பதற்காக பல தடவைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக் இஸ்லாமிய போராளிகள் அவ்வப்போது இஸ்ரேலுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.