D
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து இணையத்தில் தேடியதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பவருமான டொனால்ட் ட்ரம்பை, தாமஸ் க்ரூக்ஸ் என்பவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், அதிகாரிகள் தாமஸ் வீட்டை சோதனையிட்டபோது, அவரது தொலைபேசியில் அவர் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து தேடியமை கண்டுகிடிக்கப்பட்டது.
குறித்த ராஜ குடும்ப உறுப்பினர் பிரித்தானிய இளவரசியும், வருங்கால ராணியுமான கேட் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக அமெரிக்க வானொலியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாமஸ் இளவரசி கேட்டின் புகைப்படங்களை தனது தொலைபேசியில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்.
தாமஸ் ட்ரம்பைக் கொலை செய்ய முயன்றதற்கு அடுத்த நாள், இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் குறித்து எதுவும் தெரியாமலே, இளவரசி கேட் விம்பிள்டன் இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.