Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பிரான்ஸில் காப்புறுதி பணம் பெற்றுக்கொள்ள இலங்கையில் பெண்கள் செய்த மோசடி

0 2

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இரண்டு பெண்கள், காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள போலியான நாடகம் மேற்கொண்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக இவர்கள், அனுராதபுரத்தில் வீதியில் நபர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

தாம் வீதியால் சென்ற போது எதிரே வந்த நபர் அங்க சேட்டையில் ஈடுபட்டதாகவும், அதிலிருந்து தப்பித்துக்க முயற்சித்த வேளையில் சைக்கிளில் இருந்து வீழ்ந்து காயம் ஏற்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து  இலங்கை வருவோர் காப்புறுதி பணம் பெறுவதற்காக இவ்வாறான முறைப்பாடுகள் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.