Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

விரைவில் ஆரம்பமாகும் கட்டுநாயக்க விமான நிலைய ஜப்பானின் நிர்மாண செயற்திட்டம்

0 1

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாவது முனைய நிர்மாணப் பணிகள், ஒரு வருட கால தாமதத்தின் பின்னர், ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச முகவரகத்தின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய இரண்டாவது முனையத்தின் கட்டுமானம், ஜெய்க்காவின், 145 பில்லியன் ரூபாய் மென் கடன் திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக 2022 ஆம் ஆண்டில் இருந்து அந்த திட்டம் ஸ்தம்பித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு முடிவடையும் வரை இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விரைவில் ஆரம்பிக்கப்படும் விமான நிலையத் தரைத்தள மேம்படுத்தல் திட்டம், எதிர்வரும் நவம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக, ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம், 564 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.

எனினும், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டில், அந்த நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.