Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்

0 1

உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த விஜயம் அமையப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைய வசதி சேவையை இலங்கையில் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னதாக அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

Starlink செயல்பாடுகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

எலான் மஸ்க்கின் இலங்கை விஜயம் ஓகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.