D
இலங்கையில் நேற்று முதல் வெசாக் வாரம் ஆரம்பமாகி உள்ளது.
நேற்று பொசன் போயாவை முன்னிட்டு நாடு முழுவதும் தானசாலைகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.
நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் உணவுகளை பெற்று உண்டு மகிழ்ந்தனர். அதில் சில தானசாலை நிகழ்வுகள் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளன.
கண்டி, பிலிமதலாவ பகுதியிலுள்ள வீதியில் வைத்து மரக்கறி தன்சல் வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை மரக்கறிகளை மக்களுக்கு இலவசமாக வியாபார ஒருவர் வழங்கியுள்ளார்.
தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் இவ்வாறான தன்சல் மக்களுக்கு மிகவும் பிரயோகமாக மாறியுள்ளது.
பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்த மக்கள் தன்சல் மரக்கறிகளை பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.