D
எதிர்வரும், ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாகவே ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்தலை அறிவிப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என அவர் அமைச்சரவை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என்;று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் 2024 ஜூலை 17 க்குப் பின்னர், செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் இடையே ஒரு நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை தேர்தல்கள் ஆணையகம் மேற்கொண்டு வருகிறது.