Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கையர்கள் பெற்றுள்ள கடன் தொடர்பில் வெளியான தகவல்

0 1

இலங்கையில் 22 வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கடனில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட குடும்ப கணக்கெடுப்பு (2023) அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, அடமானக் கடன்களின் விகிதம் 31 சதவீதமாக பதிவாகியுள்ளது.

நாட்டில் 22.3 வீதமான குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடன் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

அரச மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து 21.9 வீதமும், சமுர்த்தி வங்கிகளிடமிருந்து 7.1 வீதமும், கடன் வழங்குபவர்களிடமிருந்து 9.7 வீதமும், நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிடமிருந்து 8.7 வீதமும் மக்கள் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குடும்ப அலகுகளில் கடன் சுமையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பண அழுத்தம் ஆகியவை நலனையும் பாதிக்கின்றதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.