D
பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இதன்போது, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரால் உத்தியோகபூர்வமாக இன்று(26) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஐஜிபியாக அவர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களில் இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுக்களை தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் தேசபந்து தென்னகோன் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.