D
“ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரலை” நடைமுறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஊழலுக்கு எதிரான சட்ட, நிறுவன மற்றும் மூலோபாய கட்டமைப்பிற்கு இணங்க இது முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக தீர்ப்பு மதிப்பீட்டில் தொழில்நுட்ப உதவி குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.