D
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று காலியில் நடைபெற்ற ஜயகமு பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தான் சிந்தித்து பார்த்தே இந்த தீர்மானத்திற்கு வந்ததகாவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி, ரணில் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா நேற்றையதினம் (26) தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (26) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.