D
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
விஜேராம பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில், சுசில் பிரேமஜயந்த மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் மகிந்தவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது திங்கட்கிழமை கட்சியின் அரசியல் குழுவுடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.