D
இலங்கையில் முதற்தடவையாக தமிழ் நடிகர் ஒருவரின் பெயர் வீதியொன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது.
இதன்போது, காலஞ்சென்ற தர்ஷன் தர்மராஜின் பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது.
தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையில் அவர் வசித்த வீடு அமைந்துள்ள வீதிக்கே நேற்று(27) பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை கொடகவெல பிரதேச சபை வழங்கியுள்ளது.
இலங்கையில் சிங்கள திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக திகழ்ந்த தர்ஷன் தர்மராஜ் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் திகதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.