D
பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் வருவாய்க்கு என்ன செய்வார் என மன்னர் சார்லஸ் கவலையிலிருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி தன்னிடமிருக்கும் பணம் செலவழிந்துபோனால், அதற்குப் பின் என்ன செய்வார் என அவரது தந்தையான மன்னர் சார்லசுக்கு கவலை இருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட் ஜாப்சன் (Robert Jobson) என்பவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், தன் பிள்ளைகள் எப்போதுமே கஷ்டப்படக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர் சார்லஸ்.
ஹரி தனது தொலைக்காட்சி பேட்டிகளிலும், தன் சுயசரிதைப் புத்தகத்திலும், தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதியதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவரது வருவாயில் பின்னடைவு ஏற்படத் துவங்கியது.
ஆகவே, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சார்லஸ் ஹரிக்கு கணிசமான தொகை ஒன்றைக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறார், ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட். அத்துடன், அவருக்கு வழங்கும் நிதி உதவியை அவர் முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.