D
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, தொடர்ச்சியாக கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் கட்சியுடன் பேசவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ரணில் 13ம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தார் எனவும் அதற்கு தமது கட்சி ஆதரவளிக்கவில்லை எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதனை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமக்கு ஆதரவு வழங்குமாறு கட்சியிடம் கோரியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த காரணிகளை கருத்திக் கொண்டு ரணிலுக்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.