D
2024 ஆகஸ்ட் 8 ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியில் இணைய முற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்களின் மோசமான அரசியல் வரலாறு காரணமாக நிராகரிக்கப்பட்டனர் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் புல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் அழிவுக்கு காரணமான, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை, தமது தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் பெற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார்.