Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது! கமல் குணரட்ன

0 2

நாட்டில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் போராட்டம் வெடிக்கலாம் என சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

போராட்டம் திடீரென முன்னெடுக்கப்பட்டது எனவும், இது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது, ஏன் இவ்வாறு நடந்தது என்பது குறித்தும் யார் இதற்கு பொறுப்பு என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாகவும், சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மீண்டும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் என தாம் கருதவில்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு போராட்டம் நடத்தப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரும், ராணுவத்தினரும் ஆயத்த நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய போரில் இணைந்து கொள்ளும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.