Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மூழ்கி இந்திய கடற்றொழிலாளர் உயிரிழப்பு

0 1

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(01.08.2024) அதிகாலை இடம்பெற்றது. நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய கடற்றொழிலாளர்கள் படகொன்று கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய கடற்றொழிலாளர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரு கடற்றொழிலாளர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.