Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் உயரிழப்பு

0 2

யாழில் (Jaffna) கடற்கரை வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (01) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டையை சேர்ந்த 75 வயதான க. கியூமர் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

குறித்த முதியவர், கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் கடற்கரை வீதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, அவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்துள்ள நிலையில் இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளதுடன் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய, தலையில் அடிபட்டதாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிய வந்துள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.