D
தேர்தல் கடமைகளை கருத்தில் கொண்டு சுமார் 55,000 பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
இதேவேளை, இத்தேர்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச சேவை, பொலிஸ் புலனாய்வு மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கையும் விரிவுபடுத்தப்படவுள்ளது.