D
மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு (Colombo) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (04.08.2024) இரவு இடம்பெற்ற மாநாட்டின் போதே சர்வஜன பலயவின் நிறைவேற்று உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தொழிலதிபர் திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க உட்பட ‘சர்வஜன பலய’ கூட்டணியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, நுவன் போப்பகே, கீர்த்திரத்ன உட்பட்ட பலர், ஜனாதிபதி தேர்தலுக்கான தமது போட்டியை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.