D
மகிந்த ராஜபக்ச முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆகியோர் ரணிலை ஆதரிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென மகிந்த ராஜபக்ச சில வாரங்களுக்கு முன்னதாக தம்மிடம் கூறியதாக பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன முன்னணி வேறு தீர்மானத்தை எடுத்தால் சுயாதீனமான தீர்மானத்தை எடுக்குமாறு மகிந்த தமக்கு கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமல் ராஜபக்சவும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சி வேறு தீர்மானத்தை எடுத்தால் மாற்று நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.