D
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில், கைகளை உயர்த்தியப்படி மீண்டும் வருவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
தற்போதைய தீர்மானம் எடுத்தவர்களுக்கு நல்ல அரசியல் பாடம் புகட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்காளர்களும் மகிந்த ராஜபக்சவுடன் இருப்பதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
வெற்றி வேட்பாளரை முன்வைக்கும் ஒரே அரசியல் கட்சியாக பொதுஜன பெரமுன இருக்கும். அந்த வேட்பாளரின் அறிவிப்பு நாளை (7) வெளியிடப்படும்.
ஏனைய கட்சிகள் முன்வைத்த, அனைத்து வேட்பாளர்களும் பழையவர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்றும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திரைக்குப் பின்னால் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தும் நபர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.