Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மனைவியை மிரட்டுவதற்காக தந்தை மோசமான செயல்

0 1

சமூக வலைதளங்களில் தனது இளம் மகளை தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை விட்டு பிரிந்த மனைவியை அழைத்து வர முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தனது 6 வயது மகளை அருகில் வைத்துக்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், குடும்பத் தகராறு காரணமாக, 2 மாதங்களாக வீட்டை விட்டுப் பிரிந்திருந்த மனைவியை கொன்றுவிடுவதாக வீடியோவில் மிரட்டியுள்ளார்.

மிரட்டும் வீடியோவையம் தனது டிக்டாக் கணக்கில் வெளியிட்டுள்ளார். தனது மனைவி எந்த நேரத்திலாவது இந்த வீடியோவை பார்ப்பார் என்ற எண்ணத்தில் வீடியோக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மல்வனேகம – எல்லாவ கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஜயக்கொடி ஆராச்சிலகே சமன் கருணாரத்ன என்ற இளைஞரே ஆவார்.

கடந்த மே மாதம் 24ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக சந்தேக நபரின் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மனைவி இல்லாத காரணத்தால், இந்த சந்தேக நபர் தனது மகளுடன் வீடியோ எடுத்ததுடன், மனைவியையும் குழந்தையையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. சிறுமியின் தாய் தன்னையும் மகளையும் கைவிட்டுச் சென்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.