D
பிரித்தானியாவில் (UK) வலதுசாரி கலவரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் செயலாளர்கள் அடங்கிய அவசர கோப்ரா (COBRA) கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்.
நாட்டின் அவசர சூழ்நிலைகளைப் பரிசீலிப்பதற்காக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் செயலாளர்கள் ஒன்றுகூடும் அவசர கட்டமைப்பே COBRA (Cabinet Office Briefing Room A) எனப்படுகின்றது.
அண்மைய ஆண்டுகளில் பிரித்தானியா கண்ட மிக மோசமான கலவரங்களில் ஒன்றான இந்த வலதுசாரி கலவரத்தின் போது பலர் கைது செய்யப்பட்டு வருவதுடன் நிலைமை மிகவும் தீவிரமடைந்து வருகின்றது.
இதற்கிடையில் அவசர கோப்ரா கூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ள வலதுசாரி வன்முறைகளுக்கு எதிரான சவால்களை சமாளிக்கவும், ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் நோக்கத்துடனும் அழைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேற்கு போர்ட் பகுதியில் நடந்த மிக மோசமான வன்முறைகளுக்கு பிறகே இந்த நிலைமையை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களால் பாதிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட அனைத்து தொர்டபிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.