Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ரணிலுக்கு ஆதரவளிப்பதற்காக பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்

0 2

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, மோட்டார் போக்குவரத்து திணைக்கள சட்டம் மற்றும் வீதி போக்குவரத்து சட்டத்தை மீறி பதிவு செய்யப்படாத உயர் இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளார்

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக, அறிவிப்பதற்கான கூட்டத்துக்கே அவர் இந்த பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் பயணித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு தல்துவையில் உள்ள விடுமுறை விடுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்துக்கு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்கத்திலிருந்து அகற்றுவதற்கான தற்காலிக அனுமதி இல்லாதவரை சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படாது.

அதேநேரம் இலங்கையில் அதிக திறன் கொண்ட எஞ்சின்களைக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும், நாட்டில் அதிக எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான புதிய விதிமுறைகளை ரோஹித்த அபேகுணவர்த்தன முன்மொழிந்துள்ளார்.

இலங்கையில் 450சீசீ இற்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட பல மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகவும், 450சீசீ இலிருந்து 1300சீசீ வரையிலான இயந்திரத் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் விசேட விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.