Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தேர்தலில் தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவு யாருக்கு…? தமிழர்களால் நிராகரிகப்படவுள்ள வேட்பாளர்

0 1

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் பரபரப்பு அடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டில் மீண்டும் அரசியல் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. நாளாந்தம் கட்சி தாவும் படலங்களும் இடம்பெற்று வருகிறன.

மும்முனை களமாக ஜனாதிபதி வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். மக்களால் வெறுக்கப்பட்ட அரசியல் குடும்பமாக ராஜபக்ச குடும்பம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக நாமல் அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து சிங்கள மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் ராஜதந்திரங்களை மேற்கொண்டு வெற்றியை தனதாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகிறார்.

எனினும் சிங்களவர்கள் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் அனுரகுமார திசாநாயக்கவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் ரணிலுக்கான ஆதரவு மேலோங்கியுள்ள போதும், கிராமபுற மக்கள் மத்தியில் அவர் தோல்வி அடைந்த நபராகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளை புரிந்து கொள்ளாத மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்கவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள பெரும்பான்மையின மக்கள் சஜித் பக்கம் தாவியுள்ளதாக நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு சஜித்திற்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டாலும் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தி நிலையே இதற்கு பிரதான காரணமாகும்.

Leave A Reply

Your email address will not be published.