Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: இரகசிய அறையில் பல அரசியல் ஒப்பந்தங்கள்

0 7

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் பல அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் செயற்குழு கூட்டங்கள் கடந்த சில நாட்களாக பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, வஜிர அபேவர்தன, நிமல் லான்சா மற்றும் ஜனாதிபதி தேர்தல் செயற்குழுவின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த விடுதியின் தனி இரகசிய அறையில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் பல அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது விடுதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் தங்களுடைய பாதுகாவலர்களை நிறுத்தி இரகசிய அறையில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து இந்த அரசியல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.