D
கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி (வறுமை மட்டம்) மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய தரவுகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 2012 தொடக்கம் 2013 காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 5,223 ரூபா போதுமானது என மதிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இவ்வாண்டு ஜனவரி மாதம் அப்பெறுமதியானது 18,350 ரூபாவாக உயர்வடைந்துள்ளதுடன் 2013 இல் 5,223 ரூபாவாகக் காணப்பட்ட இப்பெறுமதி 2016 இல் 6,117 ரூபாவாக அதிகரித்ததுடன் 2019 ஆம் ஆண்டு 6,966 ரூபாவாக மேலும் உயர்வடைந்தது.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டு நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து பணவீக்கம் சடுதியாக பெருமளவால் அதிகரித்தது.
அதன்விளைவாக, ஒருவர் அவரது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி 15,970 ரூபாவாக மிகையான அளவினால் அதிகரித்தது.
மேலும், இப்பெறுமதி இவ்வாண்டு ஜனவரியில் 18,350 ரூபாவாகவும் மற்றும் மே மாதத்தில் 17,608 ரூபாவாகவும் உயர்வடைந்திருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் காண்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.