D
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மனிதநேய மக்கள் கூட்டணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய முன்னணி உள்ளிட்ட 27 கட்சிகள் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளதாக 27 அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய குடியரசு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட ஐக்கிய இடதுசாரி முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.