Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தமிழர் பகுதியில் இலட்சக்கணக்கான ரூபாய்களில் விலை போன மாம்பழம்

0 1

வவுனியா (vavunya) – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ஆம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று (14)மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 285,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.