D
அமேசான் வனப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து வெடித்து சிதறிய சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் (Brazil) நாட்டின் மடோ கிராஸ்ரோ மாகாணம் அமேசானியன் நகரில் இருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு கடந்த (15) திகதி புறப்பட்ட சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் அமேசன் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.