D
பல்கேரியாவில் பிறந்தவரான பாபா வங்கா, எதிர்காலம் குறித்த பல விடயங்களை கணித்துள்ளார். அவற்றில் பிரெக்சிட், இளவரசி டயானாவின் மரணம், சோவியத் யூனியனின் சிதைவு மற்றும் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் என 85 சதவிகித கணிப்புகள் சரியாக நிறைவேறின.
ஆனால், அவரது கணிப்புகளில் சில தவறாயும் போயுள்ளன. 2016ஆம் ஆண்டில், ஒபாமாதான் அமெரிக்காவின் கடைசி ஜனாதிபதியாக இருப்பார் என்றும், 2010இல் மூன்றாம் உலகப்போர் துவங்கும் என்றும் கணித்திருந்தார் அவர். ஆனால், அவை பலிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என பாபா கணித்த விடயங்கள் குறித்த செய்திகள் இப்போதே வெளியாகிவருகின்றன.
5079ஆம் ஆண்டு வரை உலகம் அழியாது என்று கூறியுள்ள பாபா, ஆனால், 2025ஆம் ஆண்டு, பூமியின் அழிவு துவங்குவதில் முக்கிய பங்காற்றும் என்று கூறியுள்ளார்.
ஆண்டின் இறுதிவாக்கில் மிகப்பெரிய அளவிலான வானியல் நிகழ்வு ஒன்று நிகழ இருப்பதாகவும், 2025இல் ஐரோப்பாவில் ஒரு பெரும் மோதல் வெடிக்கும் என்றும், அதனால் மக்கள்தொகை பெருமளவில் குறைந்துவிடும் என்றும் பாபா கணித்துள்ளார்.
பாபாவின் கணிப்புகளை நம்புவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே நேரத்தில், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர் ஆண்டுதோறும் இப்படித்தான் சொல்கிறார். ஒருவேளை, அவர் மக்கள் கவனம் ஈர்ப்பதற்காக அப்படி செய்யக்கூடும் என்னும் ரீதியிலும் சமூக ஊடகங்களில் சிலர் பாபாவைக் குறித்து விமர்சித்துவருகிறார்கள்.