D
கனடாவின்(Canada) பணவீக்க வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்தளவு பணவீக்க வீதம் கடந்த மாதம் பதிவாகியுள்ளதாப தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கனடாவின் ஆண்டுப் பணவீக்க வீதம் கடந்த மாதம் 2.5 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனையடுத்து பணவீக்க வீழ்ச்சியானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் மற்றுமொரு வட்டி வீத குறைப்பிற்கு வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், உயர் வட்டி வீதம் மற்றும் உலக விநியோகச் சங்கிலி சாதக மாற்றம் போன்ற காரணிகளினால் பொருளாதாரம் சாதக நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.