D
உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த நட்டஈட்டுத் தொகையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) செலுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்டது.
இந்த நட்டஈட்டுத் தொகையை மைத்திரி சில தவணைகளாக செலுத்தியுள்ளார்.
இறுதியாக கடந்த 16ம் திகதி 12 மில்லியன் ரூபாவினை செலுத்தி மொத்தமாக 100 மில்லியன் ரூபா நட்டஈட்டை மைத்திரி செலுத்தி முடித்துள்ளார்.