Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

உக்ரைனுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் ரஸ்யாவின் நட்பு நாடு

0 2

உக்ரைனுடனான (Ukraine) எல்லை பகுதிகளில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் (Belarus), பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஸ்யா மீதான தாக்குதல்களை உக்ரைன் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், எந்நேரத்திலும் பெலாரஸுக்கு ஆபத்து ஏற்படலாம் என்னும் நோக்கிலேயே அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதற்கமைய, தனது நாட்டின் ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உக்ரைன் எல்லைக்கு அனுப்பியதாகக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் தெற்கு எல்லையில் அப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, விமானங்கள், விமானத் தடுப்பு ஏவுகணைகள், தொழில்நுட்ப வீரர்கள் பிரிவு உட்பட ஒரு தாக்குதல் நடந்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக சுமார் 120,000 வீரர்களை எல்லைக்கு அனுப்பியுள்ளதாக லுகாஷென்கோ குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.