D
நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைப்பின் தொற்று நோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் 24000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் திகதி வரையில் நாட்டில் 24277 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் இதில் 5183 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 8711 எனப் பதிவாகியுள்ளது.
அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.