D
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்தியாவிலிருந்து கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வடக்கிற்கு கொண்டு வரப்படுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைத்தால் இவ்வாறான கடத்தல்கள் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த போது மல்வத்து பீடாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பாலத்தினால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாது என உயர்ஸ்தானிகர் ஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாலத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்படும் எனவும் எனவும் வடக்கின் உட்கட்டுமான வசதிகள் மேம்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அனுசரணைகளில் விஹாரைகளில் சூரிய சக்தி கலங்களை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.