Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மகிந்தவின் விருப்பமின்றி களமிறக்கப்பட்ட நாமல்: நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படை

0 1

மகிந்த ராஜபக்ச, மனப்பூர்வமாக நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) வாக்களிக்க கூறியவரும் மகிந்த ராஜபச்சவே என்றும் மகிந்தானந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார்கள்.

நாமலுக்கு இது சரியான நேரமல்ல என மகிந்த ராஜபக்ச தெளிவாக தெரிவித்திருந்தார், என்றாலும் நாமலின் கடும் கோரிக்கை காரணமாக வேட்பாளராக களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றும் மகிந்த ராஜபக்ச அவரது மனசாட்சிக்கு உட்பட்டு ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.