Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஜேர்மனில் வெகுவாக அதிகரித்துள்ள சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை

0 0

ஜேர்மனிக்குள் (Germany) சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெடரல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் பெடரல் குற்றவியல் பொலிஸ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2023ஆம் ஆண்டில் ஜேர்மனிக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 266,224 பேர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த  எண்ணிக்கை, 2022ஐ விட 33.4 சதவிகிதம் அதிகமாகும். அத்துடன், அவர்களில் பெரும்பாலானோர் பெடரல் பொலிஸாரிடம் பிடிபட்டுவிட்டதாகவும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ஜேர்மனிக்குள் மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவுக்குள்ளும், 380,200 பேர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக, ஐரோப்பிய எல்லை மற்றும் கடலோரக் கடற்படை முகவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.