Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

0 1

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் வீட்டிலேயே தங்கி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை செப்டம்பர் 14 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அதன் பிறகு வீடு வீடாகச் சென்று வாக்கு அட்டைகள் விநியோகம் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் நாள் வரை, அவர் கடிதங்களை பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று, சாதாரண நேரங்களில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி, தனது கையொப்பத்தைப் பயன்படுத்தி தனக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகளை பெற முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.