Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஆப்கானிஸ்தானில் தாடி வளர்க்காத 281 வீரர்களை அதிரடியாக நீக்கிய தலிபான் அரசு

0 2

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில்(Afghanistan) 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள், பாதுகாப்புப் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் சட்டமாக்கல் பிரிவு இயக்குனர் மோஹிபுல்லா மோஹாலிஸ் தெரிவித்துள்ளார்.

தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்,  இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கநெறி தவறிய திரைப்பட இறு வட்டுக்களை சந்தையில் விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை  பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.