Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வெற்றிடமான எம்.பி பதவி : தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விடுத்துள்ள அறிவிப்பு

0 0

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரல (Thalatha Atukorale) விலகியதை அடுத்து அந்த பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளார்

இரத்தினபுரி (Ratnapura) தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல 2024 ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64 (1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துகோரல தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.