D
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் நடத்தும் கருத்துக்கணிப்புகளால் வாக்காளர்கள் செல்வாக்கு பெறவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இம்முறை 39 வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதேவேளை நாடளாவிய ரீதியில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சித்தாவல்களும் மாறி மாறி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.