D
கனடாவில் (Canada) எதிர்வரும் வாரங்களில் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை ஆறு சதங்களினால் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கனேடிய மாகாணமான நோவா ஸ்கோசியாவில் (Nova Scotia) ஒரு லீற்றர் பெட்ரோல் 6.3 சதங்களினால் குறைக்கப்படவுள்ளதுடன் புதிய விலை 162.5 சதங்களாக பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனடாவின் கேப் பிரட்டன் தீவில் (Cape Breton) ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 164.5 சதங்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, அந்நாட்டில் டீசலின் விலையும் பெட்ரோலின் விலையை போன்றே குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் (Prince Edward) மற்றும் நியூ பிரவுன்ஸ்விக்கிலும் (New Brunswick) பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 6.9 சதம் மற்றும் 6.3 சதமாக வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், குறிப்பாக கனடாவின் கரையோர பகுதிகளில் மாத்திரம் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.