Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

0 2

கடந்த அரசாங்கங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் கையாட்கள் பலர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டை விட்டு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இருந்து விசா பெற்றுக்கொண்டுள்ளதாகவும், சிலர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்கங்களின் போது தமது அரசியல் பலத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி பணம் சம்பாதித்த அரசியல்வாதிகள் இந்த நாட்டில் உள்ள தமது சொத்துக்களை இரகசியமாக விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கூட்டு முயற்சியில் ஈடுபட்டுவந்த இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வியாபாரங்களின் பங்குகளை பணமாக மாற்றி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதற்கு நேரடியாக பங்களித்த பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் சிலரும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான ஆயத்தங்களை இப்போதே மேற்கொண்டு வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தம்மை ஆட்சியில் அமர்த்த முயற்சிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பாதகமான சூழலை எதிர்கொள்வதாக முன்கூட்டியே ஊகித்த காரணத்தினால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.