D
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கு இலங்கையில் சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்று முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் வல்லை ந.அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வல்வை ந.அனந்தராஜ் கருத்துத் தெரிவித்துள்ள காணொளி ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளில் கூட எங்கும் நிலமோ சொத்துக்களோ அவருக்குக் கிடையாது என்றும் அனந்தராஜ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வல்வெட்டித் துறையில் இருக்கும் மேதகு பிரபாகரன் என பெயர் பொறிக்கப்பட்ட நீல நிற சுற்று மதிலைக் கொண்ட அந்த வீடு அவருடைய சொந்த வீடு அல்ல. அவரின் தமக்கையின் வீடுதான் அது.
உண்மையைச் சொல்லப் போனால், இலங்கையிலும், உலக நாடுகளிலும் ஒரு துண்டு நிலம் கூட பிரபாகரனுக்குச் சொந்தமாக இல்லலை எனவும் அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவர் வெறுங்கையோடு தான் சென்றிருக்கின்றார். இப்படி ஒரு தலைவரைத் தான் நாங்கள் இன்று இழந்திருக்கின்றோம்.
அந்த தலைவர் இல்லாததால் தான் இன்றைய எமது அரசியல் தலைவர்கள் எல்லாம் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.