D
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 2,400 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், டெங்கு நுளம்பு பரவும் அபாயம் நிலவும் இடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.