Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0 0


2030 ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை பத்து இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள், முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு அமைப்புகள் மூலம் அரசாங்க கட்டுப்பாட்டிற்கான ஒரு அமைப்பை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அரசின் செலவுச் சுமையைக் குறைப்பதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க, பரிந்துரைக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றி சேவையைப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடையாளம் காணப்பட்ட அரசத்துறைகளை,சட்டப்பூர்வ அமைப்புகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக மாற்றவும்,  அரச ஊழியர்களின் சேவைகள் குறித்து முறையான ஆய்வு மற்றும் அறிவியல் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன தலைமையிலான நிபுணர் குழு அரச துறையின் சம்பளத்தை திருத்துவதற்காக சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் இந்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு கொள்கை அங்கீகாரம் வழங்குவதுடன், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தொடர்புடைய முன்மொழிவுகளை உள்ளடக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.