D
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வரி நிலுவையை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், திங்கட்கிழமை (26) வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.